தலைப்பு செய்திகள்

குடியை மறக்க சிகிச்சை பெற்ற ஸ்ருதி

குடியை மறக்க சிகிச்சை பெற்ற ஸ்ருதி

மது குடிப்பது உடல் நலனை கெடுக்கும் என்று ஒவ்வொரு முறை சினிமாவில் மது குடிக்கும் காட்சி வரும்போதும் காட்டப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் மதுவின் தீமையை பட காட்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக வசனமாகவே ஒவ்வொரு படத்திலும் சொல்கிறார்கள். இந்த போதனையெல்லாம் எத்தனை பேரை திருத்துகிறது என்பது தெரியாது. அதேசமயம் சில நடிகர், நடிகைகளும் மதுவுக்கு அடிமையிருக்கும் நிலை காணப்படுகிறது.

அதை ஒப்புக்கொள்பவர்கள் ரொம்பவே குறைவு. ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசன் தான் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்ததுபற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் தனது காதல் பிரேக் அப் பற்றியும் அதுபற்றி கவலைப்படவில்லையென்றும் கூறியிருந்தார்.590211b6c9f6e4c3216b193b9697ed69--hot-actresses-indian-actresses

அதைத் தொடர்ந்து மது அருந்திய பழக்கம்பற்றி கூறினார். ‘நான் மது குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன். விஸ்கிதான் அதிகம் குடிப்பேன். ஆனால் அந்த பழக்கத்தை உடல் நலம் பாதிப்பால் நிறுத்திவிட்டேன். மதுபழக்கத் திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சையும் நான் எடுத்துக்கொண்டேன்.

ஒரு வருடம் நான் சினிமாவில் நடிக்காமலிருந்ததற்கு நான் காதல் வயப்பட்டிருந்தது காரணம் இல்லை. ஒரே பாணியிலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பாததால் ஒதுங்கியிருந்தேன். எனது தந்தைபோன்று நானும் என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அர்த்தமுள்ள விமர்சனங்களை ஏற்று அதிலிருந்து புதிய விஷயங்களை கற்க எண்ணுகிறேன்’ என்றார் ஸ்ருதி ஹாசன். (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *