தலைப்பு செய்திகள்

‘சங்கமித்ரா’ படத்தில் இளவரசியாக நடிக்க ஹன்சிகா தேர்வு?

‘சங்கமித்ரா’ படத்தில் இளவரசியாக நடிக்க ஹன்சிகா தேர்வு?

சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் அந்த கதாபாத்திரத்திற்காக லண்டனில் வாள் பயிற்சியும் பெற்றார்.
இந்நிலையில், படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகியதாக தகவல் வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அதனை உறுதி செய்தது. கதையின் முழு விவரத்தை தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி, இந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகி விட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சுருதிஹாசன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுருதி விலகியதை அடுத்து, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2 வருடங்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் படத்தில் நடிக்க நயன்தாரா யோசித்து வருகிறாராம்.
இதையடுத்து படக்குழு தற்போது ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் ஹன்சிகா நடிப்பதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.(15)654564-750x422


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *