செய்திகள்

சமந்தாவுக்கு எதிராக திடீர் அரசியல்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. விரைவில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை மணக்க உள்ளதுடன், திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் சமந்தா. இதற்கிடையில் தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி துணிகளை பிரபலப்படுத்தும் தூதராக சமந்தாவை அம்மாநில அமைச்சர் கே.தரக்கா ராம ராவ் நியமித்தார். இதற்கு அம்மாநில எதிர்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தெலங்கானாவில் பிறந்த ஒரு பெண்ணை மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னையை சேர்ந்த சமந்தாவை நியமித்தது தவறு’ என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் தரக்கா ராம ராவ், ‘சமந்தாவை தூதராக நியமித்தது ஏன்?’ என்று விளக்கினார். ‘கைத்தறி துறை என்பது இன்றைய காலகட்டத்துக்கு நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டால் மட்டுமே நீடித்திருக்க முடியும். எனவேதான் கைத்தறி துணிகள் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்றைய நவீன மாற்றங்கள் பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது’ என்றார். (15)samantha