தலைப்பு செய்திகள்

சானியா மிர்ஸாவின் தங்கைக்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சானியா மிர்ஸாவின் தங்கைக்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

டென்னிஸ் சானியா பாகிஸ்தான் மருமகளானது பழைய கதை. அது தான் அவருக்கு இந்தியா – பாகிஸ்தான் நல்லுறவின் அடையாளமாக ஒரு வாரிசு கூடப் பிறந்தாயிற்றே! இப்போது ஹாட் ட்ரெண்டிங்கில் இருப்பது சானியா குறித்த செய்தி அல்ல, அவரது தங்கையைப் பற்றிய செய்தி.ஆம், சானியாவுக்கு ஆனம் மிர்ஸா என்றொரு தங்கை இருக்கிறாரே அவருக்குத் தான் விரைவில் திருமணமாகவிருக்கிறது. மணமகன் யார் தெரியுமோ?

நம்ம பழைய இந்திய கேப்டன் அசாருதீனுடைய மகன் அசாதுதீன். இருவருக்கும் வரும் டிசம்பரில் திருமணமாகவிருக்கிறது. அதற்குள் சேதி எப்படி லீக் ஆச்சு? என்கிறீர்களா? அதான் இருக்கவே இருக்கே சோஷியல் மீடியாக்கள். மணமகளும், மணமகனும் மாற்றி மாற்றித் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒருவரை ஒருவர் நேசித்துப் புகழ்ந்து உருக அது இப்போது ஊர் முழுக்கப் பரவியாச்சு.625.0.560.350.160.300.053.800.668.160.90

இதுல என்ன இருக்குன்னு தோணலாம். அட இதுல ட்ரெண்டிங்கா அப்படி என்ன இருக்குன்னு உங்களுக்குத் தோணலாம்! விஷயம் இருக்குங்க.. இருக்கு. அது என்னன்னா? ஆனம் மிர்ஸாவுக்கு இது முதல் கல்யாணம் இல்லை. ஆனம் மிர்ஸாவுக்கு 2016 லயே தொழிலதிபர் அக்பர் ரஷீதோடு திருமணம் முடிந்திருந்தது. இவர்களது திருமணம் கடந்த வருடம் விவாகரத்தில் முடிய இப்போது நடக்கவிருப்பது மறுமணம். மணமகன் அசாதுதீன், அசாருதீனின் முதல் மனைவி நெளரீனின் மகன்.

ஆனம் மிர்ஸாவின் முதல் திருமணமும் சாதாரணமானதில்லை.அந்தத் திருமணத்திற்கும் மொத்த பாலிவுட்டும் திரண்டு வந்து மணமக்களுக்கு ஆசிகளை வழங்கிச் சென்றதை மீடியாக்கள் இன்னும் மறக்கவில்லை.அதற்குள் வந்து விட்டது அடுத்த விண்ட்டர் வெட்டிங்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *