செய்திகள்

சிங்கராகும் ஐஸ்வர்யா ராய்

அதுல் மஞ்சரேக்கர் இயக்கும் பேனிகான் படத்தில் நடிக்க உள்ளார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இந்த படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா தயாரிக்க உள்ளனர். மியூசிக்கல் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. பேனிகான் படத்தில் ஐஸ்வர்யா ராய், மற்றும் அனில்கபூர் பாடகர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தில் இருவரும் உண்மையாகவே பாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஸ்வர்யா ராய் திருமணம், மற்றும் குழந்தை பிறந்த பின்னரும் நடிப்பில் கவனம் செலலுத்தி வருகிறார். (15)31-aishwarya-rai-2-600