தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனாதிபதி-கவர்னர்,-தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கமல்ஹாசன் புகார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜனாதிபதி-கவர்னர்,-தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கமல்ஹாசன் புகார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளதாவது

, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மையம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும் அதில் ஒழுங்கு முறை விதிகளை அப்பட்டமாக மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுள்ளது என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார். சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டு ஆலைக்கு உச்சநீதிமன்றம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கடிதத்தை தமிழக, தேசிய மனித உரிமைகள் ஆணையம்,ஜனாதிபதி, நீதினறங்கள் , ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நமது மய்யம் விசில் செயலியில் வந்திருந்த பல்வேறு புகார்க் கேள்விகளை மக்கள் நீதி மய்யம் எழுப்பியிருக்கிறது. பதில் தருமா தமிழ்நாடு அரசு? (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *