தலைப்பு செய்திகள்

நயன்தாரா இடத்தில் அமலா பால்?

நயன்தாரா இடத்தில் அமலா பால்?

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால், கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றார். தற்போது முழுமையாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவரும் அவர் தொடர்ந்து பல்வேறு படங்களை புக் செய்து வருகிறார்.

தனுஷுடன் விஐபி 2, வடசென்னை ஆகிய படங்களில் நடித்துவருகிறார் அவர். மேலும் பாலிவுட்டில் கங்கனா நடித்து சூப்பர்ஹிட் ஆன குயின் படத்தின் மலையாள ரீமேக்கிலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மம்மூட்டி-நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஹீரோவாக அரவிந்த்சாமி நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் இயக்கிய சித்திக் கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் தமிழிலும் இயக்கவுள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *