கேரளாவில் ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவேகத்தில் நடந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், மகிழ்ச்சியூட்டவும் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் முகாம்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட சில நடிகர்கள் சமீபத்தில் முகாமிற்கு சென்று சந்தித்த நிலையில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் முகாமிற்கு விசிட் செய்தனர். பத்தனம் திட்டாவில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் அமர்ந்து பாடல்கள் பாடி அவர்களை மகிழ்வித்ததுடன் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள். நடிகைகள் தங்களோடு குடும்பத்தோடு குடும்பமாக அமர்ந்து பாட்டு பாடி மகிழ்ந்ததை குழந்தைகள் வெகுவாக கைதட்டி ரசித்தனர். பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்து அவர் பாடல்களை பாடி மகிழ்வித்தார். (15)