தலைப்பு செய்திகள்

பெண் தோழியை தேடுவதாக நடிகர் ஆர்யா டுவிட்டரில் அறிவிப்பு

பெண் தோழியை தேடுவதாக நடிகர் ஆர்யா டுவிட்டரில் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வெளியான ‘கடம்பன்’ படமும் தோல்வியை தழுவியது.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை.
பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா பெண் தோழியை தேடத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ‘உடனடியாக தனக்கு ஒரு கேள் பிரண்ட் வேண்டும்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஆர்யாவின் வீடியோ அறிவிப்பை நடிகை வரலட்சுமி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கூறி இருப்பதாவது:-
“நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஆர்யா. நான் இப்போது முக்கியமான பிரச்சினையில் இருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எனக்கு உதவுங்கள். உடனடியாக எனக்கு கேர்ள் பிரண்ட் தேவை. பிளீஸ்…”இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.(15)201706241702304495_arya3._L_styvpf


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *