தலைப்பு செய்திகள்

மகளை நடிகையாக பார்ப்பதை விட மணப்பெண்ணாக பார்ப்பதே மகிழ்ச்சி நடிகை ஸ்ரீதேவி

மகளை நடிகையாக பார்ப்பதை விட மணப்பெண்ணாக பார்ப்பதே மகிழ்ச்சி நடிகை ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நடிக்கும் முதல் படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதற்கான எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனினும் ஸ்ரீ தேவி கூறுகையில் “ஜான்வியின் திருமணமே எனக்கு அதிக சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் தற்போது அவர் கரண் ஜோஹர் படத்தில் டைகர் ஷ்ரோப் ஜோடியாக ஸ்டூடண்ட் ஆப் த இயர் 2 (Student of the Year 2 ) படத்தில் அறிமுகமாக உள்ளார்.
மேலும் அவர்,“ ஜான்வி நடிப்பதில் ஆர்வமாக உள்ளாள். எனக்கு இதில் ஆர்வமில்லை. இத்துறையை பற்றி நான் குறை சொல்ல வில்லை. என்னை உருவாக்கியது இத்துறை தான். எனினும் ஒரு அம்மாவாக அவள் நடிகையாவதை விட அவள் திருமணம் செய்து கொள்வதே எனக்கு மகிழ்ச்சி. நல்ல நடிப்பை வெளிப்படுத்தினால் அம்மாவாக அவளை நினைத்து பெருமைப்படுவேன். மேலும் நானும் என் கணவரும் அவளது எதிற்காலத்தில் கவனமாக இருப்போம்” என கூறினார்
மேலும் அவர் தனக்கும் தன் மகள்களுக்கும் இடையேயான நட்புறவை பற்றியும் கூறியுள்ளார். என் மகள்களுடன் பொதுவிழாக்களில் பங்கேற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் சிலர் அதை தவறாக புரிந்து கொள்கின்றனர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ தேவியின் 300 வது படமான மாம் ( MOM) விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் புலி. பாலிவுட்டில் கடைசியாக நடித்த படம் 2012 இல் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ். தற்போது அவர் நவாசுதீன் சித்திக் மற்றும் அக்‌ஷை கன்னாவுடன் இணைந்து படம் (MOM) நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் ஜூலை 7ல் வெளியாக உள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *