தலைப்பு செய்திகள்

மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோர்த்த நயன்தாரா

மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோர்த்த நயன்தாரா

நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்து, இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள விஷயம் என்னவென்றால், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.
‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். கல்யாண் இயக்கியுள்ளார். ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். கோபி நயினார் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவ்விரண்டு படங்களையும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்படி ஜே.ராஜேஷ் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)201706301801595866_Prabhu-deva-Nayanthara-movie-satellite-rights-bagged-leading_SECVPF


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *