தலைப்பு செய்திகள்

மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா?

மீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா?

அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், ரெபோமானிகா, இந்துஜா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் ஆகியோரும் உள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது.இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். விஜய்யின் 63-வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்ற பெயரிலேயே படப்பிடிப்பை நடத்தினர். படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

விஜய் பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந்தேதி மாலை படத்தின் தலைப்பையும் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வெறித்தனம், மைக்கேல் ஆகிய பெயர்களில் ஒன்றை தலைப்பாக வைப்பார்கள் என்று தகவல் பரவி வருகிறது.362087a840316f5d6e6762468770024a

இந்த படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா பெயரும் அடிபடுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *