தலைப்பு செய்திகள்

யோகா பயிற்சி மையம் அமைக்கிறார் அனுஷ்கா

யோகா பயிற்சி மையம் அமைக்கிறார் அனுஷ்கா

நடிக்க வருவதற்கு முன் யோகா டீச்சராக இருந்தவர் அனுஷ்கா. பலருக்கு யோகா பயிற்சி அளித்து வந்தவர் முன்னணி நடிகையான பிறகு தானே யோகா செய்வதற்கு நேரமில்லா மல் திணறினார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடற்தோற்றத்தை ஒல்லியாகவும், குண்டாகவும் மாற்றி நடித்தார். இதனால் அவரது உணவு பழக்கம், உடற்பயிற்சி நடைமுறைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 100 கிலோ வெயிட்போட்டு ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்தார். பிறகு பழைய தோற்றத்துக்கு தனது உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்தார். இன்று வரையிலும் அந்த முயற்சியில் அவருக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் யோகாசனம் மூலம் உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறார். நேற்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனது இணைய தள பக்கத்தில் தான் யோகா செய்யும் படத்தை வெளியிட்டு யோகா தினத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ‘என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு நான் யோகா பயிற்சி அளிக்க எடுத்த முடிவுதான். டாக்டர், இன்ஜினியர்கள் என தகுதி படைத்த குடும்பத்திலிருந்து வந்த நான் யோகா பயிற்சி டீச்சராக செல்ல வேண்டும் என்று எடுத்த முடிவே துணிச்சல் நிறைந்தது என எண்ணுகிறேன்.
அது என் வாழ்க்கையை மாற்றியது. எனது பொறுப்புக்கும் உயர்வுக்கும் அதுவே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’ என்றார். அனுஷ்காவை திருமணம் செய்துகொள்ளும்படி குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் அதுபற்றி மவுனம் காத்து வருகிறார். நடிப்பிலிருந்து விலகிய பிறகு யோகா பயிற்சி மையம் அமைப்பதுதான் அவரது லட்சியமாம்.(15)1498201540


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *