தலைப்பு செய்திகள்

ரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா

ரஜினி, கமலை பெரிதும் நம்பும் தமிழ் சினிமா

தமிழ் சினிமா கடந்த சில ஆண்டுகளாகவே கடும் இழப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியாகும் படங்களுக்கு ஒரு வாரம் தான் அதிகபட்ச ஆயுள். வெற்றி வெற்றி என்று கூறிக்கொள்ளும் படங்கள் கூட கணக்கு போட்டு பார்த்தால் இறுதியில் இழப்பை தான் சந்திக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் ஜி.எஸ்.டி, டிக்கெட் விலை அதிகரிப்பு, 48 நாட்கள் வேலை நிறுத்தம் என்று மூன்று காரணங்கள் சினிமாவை பாதித்தன.

டிக்கெட் விலை அதிகரிப்புக்கு பின் இரண்டு வாரங்கள் திரையரங்குகள் ஈ ஓட்டின. பின்னர் வெளியான விக்ரம் வேதா படம் ஓடியதால் தமிழ் சினிமா சற்று நிமிர்ந்தது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் பட வெளியீடு நிறுத்தமும் அமலுக்கு வந்தது. வேலை நிறுத்தம் முடிந்து படங்கள் வெளியாக தொடங்கினாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து, இரும்புத்திரை இரண்டு படங்கள் தான் வெற்றி பெற்றன.201805271304494861_Tamil-cinema-most-trusted-Rajini-and-Kamal_SECVPF

ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே நிமிர வேண்டும் என்றால் ரஜினி, கமல், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக வேண்டும். அந்த எதிர்பார்ப்பை ரஜினியின் காலாவும், கமலின் விஸ்வரூபம் 2 படமும் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கிறது தமிழ் சினிமா.

ரஜினிக்கு காலா, 2.0, கார்த்திக் சுப்புராஜ் படம் என்று மூன்று படங்களும் கமலுக்கு விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என்று மூன்று படங்களும் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. திட்டமிட்டபடி இந்த 6 படங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியானாலே போதும். தமிழ் சினிமா மீண்டும் வலுவானதாக மாறிவிடும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *