தலைப்பு செய்திகள்

வாணி ராணி, தாமரை தொடர்கள் வெற்றி விழா

வாணி ராணி, தாமரை தொடர்கள் வெற்றி விழா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி, தாமரை மெகா தொடர்கள் முறையே 1500, 1000 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து இரு மெகா தொடர்களின் வெற்றிவிழாவை ராடான் நிறுவனம் சென்னையில் நேற்று முன்தினம் கொண்டாடியது. இரு தொடர்களிலும் நடித்தவர்கள் மற்றும் பணிபுரிந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அப்போது சரத்குமார் பேசும்போது, ‘40 வருடங்களாக சினிமா மற்றும் டிவியில் நடித்து வரும் ராதிகாவுக்கு யாரும் பாராட்டு விழா நடத்தவில்லை என்றாலும், வரும் ஆகஸ்ட் 21ம் தேதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அவருக்கு விழா நடத்த முடிவு செய்துள்ளேன்’ என்றார். ராதிகா பேசும்போது, ‘சினிமா படம் தயாரிப்பதை விட, டி.வி தொடர் தயாரிப்பது மிகவும் சிரமம். அடுத்து எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் நான் நடிக்கும் சந்திரகுமாரி என்ற மெகா தொடர் உருவாகிறது. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் சன் டிவிக்கு நன்றி’ என்றார். விழாவில் நடனம் மற்றும் காமெடி நிகழ்ச்சி நடந்தது.(15pic


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *