விஜய் நடிக்க இருந்த படத்தில் விஜய் ஆண்டனி

விஜய் நடிக்க இருந்த படத்தில் விஜய் ஆண்டனி

ஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டில் விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் அந்த படம் திடீரென்று கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், பகலவன் படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *