தலைப்பு செய்திகள்

விமானத்தளத்தில் இடம்பெறும் நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்தே இரசாயன தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது- அமெரிக்கா

விமானத்தளத்தில் இடம்பெறும் நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்தே  இரசாயன தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது- அமெரிக்கா

கடந்த ஏப்பிரலில் இரசாயன தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்ட விமானதளத்தில் மும்முரமான நடவடிக்கைகள் இடம்பெறுவதை அடிப்படையாக வைத்தே சிரியா மீண்டும் தாக்குதலிற்கு திட்டமிடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சையரட் விமானதளத்தில் மும்முரமான நடவடிக்கைகளை இடம்பெறுவது அவதானிக்கப்பட்டதாக பென்டகன் பேச்சாளர் ஜெவ் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.இரசாயன ஆயுத தாக்குதலுடன் தொடர்புடைய விமானமொன்று இங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் தலைவர் பொப் கோர்கர் சிரியா மற்றுமொரு இரசாயன தாக்குதலிற்கு தயாராகிவருகின்றது என வெளியாகியுள்ள எச்சரிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் நிக்கிஹெலிஅமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை சிரியாவிற்கு மாத்திரமல்ல அதன் சகாக்களான ரஸ்யாவிற்கும் ஈரானிற்கும் பெருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிரியா அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வரும் ரஸ்யா அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை கண்டித்துள்ளதுடன் ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *