செய்திகள்

சின்னசாமி ஸ்டேடியத்தில் டோணி மகளின் சின்ன பாதம் பட்டது

டோனி மகள் ஜிவா முதல் முறையாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தனது சின்னச்சிறு பாதம் பதித்து களம் கண்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கவிருந்த நிலையில் டோனி மனைவி சாக்ஷி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் டோனி ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் இருந்ததால் அவர் இந்தியா திரும்பவில்லை.

இந்நிலையில் ஒரு மாத காலத்துக்கு பிறகு உலக கோப்பை முடிந்த பிறகே நாடு திரும்பி மகளை பார்த்தார் டோணி. மகளுக்கு ஜிவா என்று பெயரிட்டும் கொஞ்சி வருகிறார். தனது மகளின் முகத்தை பார்த்த பிறகு டோணியால் அந்த குழந்தையை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை.

இருப்பினும் ஐபிஎல் போட்டிகள் அவரது பாசத்துக்கு இடைஞ்சலாக உள்ளன. எனவே நேற்று சென்னை-பெங்களூரு போட்டியின்போது மனைவி மகளையும் பெங்களூரு ஸ்டேடியத்துக்கே கூட்டி வந்துவிட்டார் டோணி. வீரர்கள் டிரெஸ்சிங் ரூமில் தனது குழந்தையை கொஞ்சும் படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அதில் ஜிவாவின் முதல் ஸ்டேடியம் டெபுட் இது என்று குறிப்பிட்டுள்ளார்.