செய்திகள்

சிராந்தியையும் யோசிதவையும் கைது செய்வதற்குத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே  விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள, 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், இவர்களைக் கைது செய்வதன் மூலம், 19வது திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுக்க ஐதேக முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.