செய்திகள்

சிராந்தி ராஜபக்சவின் உடற்பயிற்சி நிபுணர் பொலிஸ் விசாரணையில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்திக்கு உடற்பயிற்சிகளை வழங்கிய பெண்மணி கடந்த வாரம் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி லோரிஸ் வீதியில் உள்ள காணியொன்றினுள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாகனங்கள் தொடர்பாகவே அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட காணிக்கான வாயில்கதவின் சாவிகள் சிராந்தியின் உடற்பயிற்சி நிபுணர்pடம் காணப்பட்டதாலேயே அவரை விசாரணைசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியை பொலிஸார் சோதனை செய்தவேளை ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூடப்பட்ட நிலையில்காணப்பட்டுள்ளன, அவற்றிற்குள் பல ஆவணங்கள் காணப்பட்டு;ள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பேர்து குறிப்பிட்ட வாகனங்கள் கார்ல்டன் பவுண்டேசனுக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.குறிப்பிட்ட நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தவர்களின் ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறிப்பிட்ட சாவிகளை ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் கையளித்ததாக சிராந்தியி;ன் உடற்பயிற்சி நிபுணர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காணியின் உரிமையாளர் யார் என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளனர்,குறிப்பிட்ட காணியை முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஓருவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 9ம்திகதி குறிப்பிட்ட வாகனங்கள் அவசரஅவசரமாக அந்த காணிக்குள் சென்றதாக அருகிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.