செய்திகள்

சிரானியின் பதவிவிலக்கலும் பீரிசின் நியமனமும் செல்லுபடியற்றவை : ஜனாதிபதி விளக்கம்

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கியமையும் மொஹான் பீரிசை பிரதம நீதியரசர் பதவிக்கு முன்னைய அரசாங்கம் நியமித்தமையும் சட்டத்துக்கு முரணானது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை யாப்பின் 107 ஆம் ஷரத்தின் 2 ஆம் பிரிவின்படி பிரதம நீதியரசரை நீக்குவதற்கு கோரி பாராளுமன்றத்தில் முறைப்படியான பிரேரணை கொண்டுவரப்படவில்லை என்றும், சிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவது தொடர்பில் ஜனாதிபதி ஒரு விசேட தெரிவுக் குழுவை அமைப்பதற்கு பாராளுமன்றம் அவருக்கு சிபார்சு செய்வதற்கான பிரேரனையே பராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் ஜானாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை 8 ஜனவரி 2013 இல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டதாகவும் பின்னர் ஜனவரி 10 ஆம் 11 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் ஆனால் அந்த பிரேரணையில்107 ஆம் ஷரத்தின் 2 ஆம் பிரிவின்படி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கு கோரப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் மொஹான் பீரிசுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் சிரானியின் பதவிவிலக்கல் சட்டத்துக்கு முரணானது என்றும் அதனால் அது செல்லுபடியற்றதுஎன்றும் அதேபோல பீரிசின் நியமனமும் சட்டத்துக்கு முரனானது என்றும் அதனால் செல்லுபடி அற்றது என்றும் குறிப்பிட்டுளார்.