செய்திகள்

சிரியாவின் பாலஸ்தீன அகதிமுகாமிற்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.

சிரியாவின் தலைநகர் டமஸ்கசில் உள்ள பாலஸ்தீன அகதிமுகாம் ஓன்றிற்குள் நுழைந்துள்ள ஐஎஸ் போராளிகள் அதன் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டமஸ்கசில் உள்ள யர்முக் அகதிமுகாமிற்குள் ஐஎஸ் அமைப்பினர் நுழைந்துள்ளதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
குறிப்பிட்ட முகாமிற்குள் உள்ள பாலஸ்தீன போராளிகளுக்கும், ஐஎஸ் அமைப்பிற்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட முகாமில் 18000ற்கும் மேற்பட்ட அகதிகள்உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1948 இல் உருவாக்கப்பட்ட இந்த அகதிமுகாம்,பாலஸ்தீனத்தின் புலம்பெயர்ந்த அகதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.