செய்திகள்

சிரியாவின் வரலாற்று சிறப்புமிக்க பால்மிரா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்

யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள சிரியாவின் பால்மிரா நகரின் பெரும்பகுதியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நகரின் வடக்கு பகுதியை கைப்பற்றிவிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் தெற்கு நோக்கி முன்னேற முயற்சிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நகரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாறு மற்றும் கலாசார சிறப்பு தொடர்பான கட்டிடங்கள் அமைந்துள்ளதால் யுனெஸ்கோ பட்டியலில் இந்த நகரம் இடம்பெற்றுள்ளது.

‘சிரியா பாலைவனத்தில் உள்ள பசுஞ்சோலை’ என வர்ணிக்கப்படும் பால்மிரா நகரில் உள்ள பழம்பெருமை மிக்க கட்டிடங்களையும் நினைவிடங்களையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விரைவில் தரைமட்டமாக்கி விடுவார்கள் என அஞ்சப்படுகின்றது