செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது விமானப்படைகள் தாக்குதல்: 140 பேர் பலி

சிரியாவில் ரக்கா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தபாக்கா விமானதளத்திற்கு அருகில் அமைந்துள்ள ஐ.எஸ். முகாம்களின் மீது அந்நாட்டின் விமானப்படை இன்று நடத்திய கடும் தாக்குதலில் 140 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ரக்கா நகருக்கு அடுத்தபடியாக இங்குள்ள தபாக்கா விமானதளத்தை ஒட்டியுள்ள பகுதியை சமீபத்தில் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.

இப்பகுதியை மீட்பதற்காக சிரியா விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 140 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சிரியாவின் பிரபல ‘சனா டி.வி.’ செய்தி வெளியிட்டுள்ளது