செய்திகள்

சிரியாவில் வன்முறைகள் தொடர்வதற்கு ரஷ்யாவும் காரணம் என்கிறது அமெரிக்கா

சிரியாவில் இடம்பெறும் யுத்தக்குற்றங்களுக்காக அந்த நாட்டை பொறுப்புக்கூறச்செய்யும் நடவடிக்கைளை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவருவதை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தான பவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஜனாதிபதி பசார் அசாத்திற்கு தான் நினைத்ததை செய்வதற்கான துணிச்சலை வழங்கியுள்ளது,
சிரியா மோதலுக்கு சமாதான தீர்வை காண்பதற்கான பாதுகாப்புச்சபையின் திறனை ரஸ்சியாவின் இத்தகைய செயற்பாடுகள் பாதித்துள்ளன என சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவிற்கு அழுத்தங்களை கொடுக்குமாறு ரஷ்யாவை கேட்டுக்கொள்ள முடியாத நிலையில் பாதுகாப்பு சபை உள்ளதாலேயே அங்கு வன்முறைகள் இடம்பெறுகின்றன.
நாங்கள் எதனை செய்யவிரும்புகின்றோமோ அதனை செய்வதற்கு ரஷ்யா தயாரில்லை.என தெரிவித்துள்ள பவர் சிரியா ஜனாதிபதிக்கான நாள் வரும் ஆனால் இது மிகவும் மெதுவாகவே இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.