செய்திகள்

சிரியாவில் வான்வெளித் தாக்குதல்: ஐ.எஸ். முக்கியத் தலைவர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அல் ஹசாரி. இவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 3 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 16-ம் தேதி சிரியாவில் நடைபெற்ற வான்வெளித் தாக்குதலில் அல் ஹசாரி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமை மையமான பென்டகன் தற்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் கூறும்போது “அல் ஹசாரி மரணத்தின் விளைவாக ஐ.எஸ் அமைப்பு வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளை, சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தங்கள் அமைப்புடன் ஒருங்கிணைக்கும். மாற்று நடவடிக்கையின் மூலம் ஐ.எஸ். அமைப்பின் பதில் தாக்குதல் தடுக்கப்படும்” என்றார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அரசை எதிர்த்து போராடும் ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆயுத தளவாடங்களை அளித்து அல் ஹசாரி உதவி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது