செய்திகள்

சிரியாவில் 90 கிறிஸ்தவர்களை ஐஎஸ் அமைப்பு கடத்தல்

சிரியாவின் அஸ்சிரியன் கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த 90 பேர் ஐஎஸ் அமைப்பினால் கடத்தப்பட்டுள்ளனர்
சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பொன்று இதனை அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை கபுர் ஆற்றின் கரையோரமாக உள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஐஎஸ் உறுப்பினர்கள் 90 அஸ்சிரியன் ஆண்களை கடத்திச் சென்றுள்ளனர்.தல் சமாரன் என்ற கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகளவிற்கு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் 3000 பேர் தப்பியோடி குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
பெய்ருட்டில் வாழும் குறிப்பிட்ட கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த பெண்மணியொருவர் தனது குடும்பத்தவர்களுடன் தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.அவர்கள் கொல்லப்பட்டுள்ளனரா அல்லது உயிருடன் இருக்கின்றனரா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் 40.000 அஸ்சிரியன் கிறிஸ்தவ மதப்பிரிவினர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.