செய்திகள்

சிரியா அரசாங்கம் குறித்து ஜோன் கெரி சர்ச்சைக்குரிய கருத்து

சிரியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் அந்த நாட்டு ஜனாதிபதியும் யுத்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளவருமான பசார் அல் அசாத்தை சேர்த்துக்கொள்ள வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் கெரி வெளியிட்டுள்ள கருத்திற்கு அராபிய அரசியல் வட்டாரங்கள் ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.
சவுதிஅரேபியாவின் ஆளும்குடும்பத்துடனும்,அந்த நாட்டின் சுனி இஸ்லாமிய மதகுருமாருடனும் நெருக்கமான தொடர்புகளை பேணும் ஆய்வாளர்கள் கெரியின் கருத்துகுறித்து உடனடியாக கவலை வெளியிட்டுள்ளனர்.
தனது இலட்சக்கணக்கான மக்களை கொலைசெய்து மேலும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ள பசார் தனது சட்டரீதியான தன்மையை இழந்துவிட்டார்.எப்படி அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும், எப்படி அவரை தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க விடமுடியும் என வளைகுடா ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர் ஓருவர் கேள்வி எழுப்பியுள்;ளார்.
முன்னதாக சிரியா குறித்து கருத்து தெரிவித்திருந்த கெரி இறுதியில் பசாருடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்,நாங்கள் எப்போதும் அவருடன் பேச்சுக்களை மேற்கொள்ள தயாராகவுள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.