செய்திகள்

சிரியா செல்ல முயன்ற ஜப்பானிய ஊடகவியலாளர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

சிரியாவிற்கு செய்திசேகரிப்பதற்காக செல்ல முயன்ற தனது நாட்டு ஊடகவியலாளரை தடுத்து நிறுத்தியுள்ள ஜப்பான் அவரது கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்துள்ளது.
சுயிச்சி சுகிமோட்டோவின் உயிரை பாதுகாப்பதற்காக அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளமை இதுவே முதற்தடவை. ஜப்பானின் கடவுச்சீட்டு சட்டம் ஒருவரின் உயிரை பாதுகாப்பதற்காக அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யலாம் என தெரிவிக்கின்றது,அதன்படியே நடவடிக்கையெடுத்தோம் என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் சிரியாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்த 59 வயது ஊடகவியலாளர் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையிதுவேன குறிப்பிட்டுள்ளார்.தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கவில்லைஎன்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.