செய்திகள்

சிரிய இரசாயன குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்தல்

சிரியாவில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள இரசாயன குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் ரஷ்யா மற்றும் சீனா ஆகியன வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையிடம் இந்த வேண்டுகோளை ரஷ்யா மற்றும் சீனா ஆகியன பிறப்பித்துள்ளன.

சிரியாவில் இராணுவத்தினர் மற்றும் ஐ.எஸ் ஆயுததாரிகளினால் இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கபட வேண்டும் எனவும் இரு நாடுகளும் துரிதப்படுத்தியுள்ளன.

எனினும் சிரிய அரச படையினர் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என சில அரச தரப்பு அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் நிலை கொண்டுள்ள மற்றும் நிலை கொண்டிருந்த ஐஎஸ் உட்பட பல பயங்கரவாதிகள் அமைப்பினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய உயர்ஸ்தானிகர் விட்டாலி சேர்கின் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கவரவாதிகள் இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமை தொடர்பில் தமக்கு தகவல்கள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக விட்டாலி சேர்கின் தெரிவித்துள்ளார்.

n10