செய்திகள்

சிரிய உள்நாட்டு மோதல்களில் இதுவரை 76,000 பேர் பலி

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களில் 2014 இல் 76, 000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனை சேர்ந்த சிரியாவில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கான குழு இந்த புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும்,ஏனைய தீவிரவாத அமைப்புமே இந்த உயிரிழப்புகளுக்கு பெருமளவிற்கு காரணம்,அதேவேளை அமெரிக்க விமானத்தாக்குதல்கள், சிரிய அரசாங்கத்திற்கும், கிளர்ச்சிக் குழுக்களிற்கும் இடையிலான மோதல்,ஆகியவை காரணமாகவம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 இல் 73,447 பேர் கொல்லப்பட்டனர், 2 011 இல் இப்பகுதியில் மோதல் ஆரம்பமான பின்னர் இரண்டுலட்சத்திற்கும் அதிகமானவாகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் கொல்லப்பட்டவர்களில் 18.000 பேர் பொதுமக்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.