செய்திகள்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் போன்றே ரணில் செயற்படுகின்றார் : டிலான் பெரேரா

பொலிஸ் மா அதிபருக்கும் மேலாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் போல் செயற்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸாரின் வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதாக  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இராஜங்க அமைச்சுப் பதவியை துறந்து அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர்  நேற்று எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொலிஸ் மா அதிபர்  இலங்ககோன்  ஆனால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரணில் என்றுதான் கூறவேண்டும். அவரின் செயற்பாடுகள் அப்படித்தான் காணப்படுகின்றது. அவரே யாரை நீதி மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென தீர்மானிக்கின்றார். அன்று வெள்ளை வான் போன்று தற்போது வெள்ளை பேனைகாணப்படுகின்றது. ரணில் அந்த பேனையை கொண்டே சகலதையும் முன்னெடுக்கின்றார்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை இதனால்தான் நாம் பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.