செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற குப்பிளான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேக உற்சவம்

ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் இடம்பிடித்த சரவணச்சாமியாரால் போற்றி வணங்கப்பட்ட பெருமைக்குரிய யாழ்.குப்பிளான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயம்(சமாதி கோவில்) வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10 ஆம் திருவிழா கடந்த 1 ஆம் திகதி திங்கட்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

காலை 10 மணிக்கு அன்னைக்கு விசேட அபிஷேக ஆராதனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அகிலாண்ட நாயகியான சிவகாமி அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

இந்த ஆலயம் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பல வருடங்கள் அபிடேக பூசைகள் எதுவும் இடம்பெறாத நிலையில் காணப்பட்டது.

IMG_4412 IMG_4426 IMG_4444 IMG_4452 IMG_4457