செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மட்டு மைலம்பாவெளி காமாட்சி அம்மன் தேர் உற்சவம்

இலங்கையின் மிகப்பிரமாண்டமான ஆலயமாகவும் இலங்கையில் ஒரேயொரு காமாட்சி அம்மன் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு காமாட்சிஅ ம்பாள் ஆலயத்தில் தேர் உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விசேட கிரியைகள் நடைபெற்று அம்பாளுக்கு அபிசேம்,ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்பாளின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் ஒரு பகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் நடைபெற்ற இந்த தேர் உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேரோடும் அம்மன் ஆலங்களில் ஒரேயொரு ஆலயமாக காமாட்சிஅ ம்பாள் ஆலயம் உள்ளது.

கடந்த 20ஆம் திகதி ஆரம்பமான காமாட்சிஅ ம்பாள் ஆலயத்தில் இந்த வருடாந்த உற்சவத்தில் தினமும் சிறப்பான முறையில் உற்சவங்கள் நடைபெற்றுவந்தன.

இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து தினமும் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

IMG_1968 IMG_1974 IMG_1980 IMG_1981 IMG_1991 IMG_1995