சிறப்பாக நடைபெற்ற யாழ்.குப்பிளான் வீரமனை கன்னிமார் கௌரியம்பாள் ஆலய வேட்டைத் திருவிழா
மாலை 04.30 மணிக்கு வேட்டைத் திருவிழாவுக்கான விசேட அபிஷேக பூசைகள் ஆரம்பமாகியது.அதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து சுமார் முக்கால் கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய முன்றலில் மாலை 5.30 மணியளவில் வேட்டைத் திருவிழா உற்வத்தின் வாழை வெட்டு நடைபெற்றது.ஆலயத்தின் மீளா அடியவர்கள் அம்பாளைத் தங்கள் தோள்களில் சுமந்து செல்ல கௌரியம்பாள் வேட்டையாடிய காட்சியை அடியார்கள் மெய்மறந்து இரசித்தனர்.
தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அகிலாண்ட நாயகியான கன்னிமார் கௌரித் தாய் அடியார்கள் புடை சூழத் தனது இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார்.இதன் போது மங்கல வாத்தியங்கள் முழங்க சிறுவர்கள் பல்வேறு வேடமணிந்து பங்கேற்ற ஆட்ட நிகழ்வை அடியார்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.ஆக்ரோஷத்துடன் வேட்டையாடி விட்டுச் சந்நிதி திரும்பிய கௌரியம்பாளை அடியார்கள் தங்கள் இல்லங்கள் தோறும் பூரண கும்பம் வைத்து மங்கல விளக்கேற்றி,நைவேத்தியம் படைத்து வரவேற்றனர்.
இதேவேளை இவ்வாலயத்தின் எட்டாம் திருவிழாவான சப்பறத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(01.5.2015) இரவு 7 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்.நகர் நிருபர்-