Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையிலும் உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் -விடுக்கப்பட்டது அவசர எச்சரிக்கை

இலங்கையிலும் உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் -விடுக்கப்பட்டது அவசர எச்சரிக்கை

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் குறித்து இலங்கை விழிப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் இருவர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேககிக்கப்படும் சீனப் பெண்ணொருவர் உட்பட இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்கம் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுரைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தியுள்ளது. வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் உஹூன் பகுதியில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளையும் இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.இதேவேளை, சீனாவின் பீஜிங், சென்டு மற்றும் சிவான்கோ ஆகிய விமான நிலையங்களிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு தினமும் 4 விமானங்கள் வந்தடைவதுடன் அந்த விமானங்களின் ஊடாக நாளொன்றிற்கு சுமார் 500 இற்கும் அதிகமான பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.இலங்கை விமான சேவையின் ஊடாகவும் சீனாவின் குறிப்பிட்ட சில விமான நிலையங்களுக்கு பயணிகள் செல்கின்றனர். ஆகவே, அந்த பயணிகளும் இந்த தொற்று தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் அங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது இலங்கை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *