Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கேப்பாப்புலவில் தமிழ் மக்கள் கூட்டணி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியது

கேப்பாப்புலவில் தமிழ் மக்கள் கூட்டணி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியது

வடமகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி. விக்ணேஷ்வரன் 709 வது நாளாக தமது சொந்த நிலத்தை விடுவிக்கக்கோரி போராட்டம் செய்யும் கேப்பாப்புலவு மக்களை சந்திததுடன் அங்குள்ள மக்களுக்கு ஒரு தொகை உணவுப்பொருட்களை வழங்கியதுடன் கஷ்டமான நிலையில் உள்ள மாணவர்களுக்கும கற்றல் உபகரணங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன் மற்றும் மத்தியகுழு உறுப்பினர் கிருஷ்ணமீனன் ஆகியோரும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கேப்பாப்புலவு நிலத்தை விடுவிப்பது தொடர்பாக தான் ஆளுனருடன் கதைத்ததாகவும் அவர் கேப்பாப்புலவு கேந்திர முக்கியத்தூவம் என இராணுவத்தினர் கூறியதாகவும், ஆனாலும் அதனை மறுத்து ஆளுநருக்கு விளக்கம் அளித்ததாகவும் அங்கு மக்களிடம் கூறினார். கேப்பாப்புலவில் இராணுவத்தை தக்கவைப்பது மகாவலி திட்டத்தை நகர்த்துவற்கான அரசியல் நோக்கமே என்று ஆளுநருக்கு கூறியதாகவும் இராணுவத்தை வெளியேற்ற 06 மாத கால அவகாசம் கேட்டதற்கு அப்படி செய்வதைவிட கொஞ்சம் கொஞ்சமாக படையினர் வெளியேறினால் மக்களுக்கு நம்பிக்கை வரும் என்றும் 6 மாதம் காத்திராமல் இப்பொழுதே இராணுவம் வேயேற தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

wigneswaran in Keppappulavu (1) wigneswaran in Keppappulavu (2) wigneswaran in Keppappulavu (3) wigneswaran in Keppappulavu (4) wigneswaran in Keppappulavu (5) wigneswaran in Keppappulavu (7) wigneswaran in Keppappulavu (8) wigneswaran in Keppappulavu (9)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *