Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கோத்தாபயவின் இரட்டை பிரஜாவுரிமை வழக்கு இன்று நண்பகல் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு

கோத்தாபயவின் இரட்டை பிரஜாவுரிமை வழக்கு இன்று நண்பகல் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு

கோத்தாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று இரண்டாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனு மீதான பரிசீலனை நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகியது. மாலை 6.15 வரை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.நேற்று அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷானக டி சில்வா விடயங்களை மன்றில் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்றும் இடம்பெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 301 ஆவது அறையில் இந்த மனு மூன்றாம் நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.விசாரணையினைத் தொடர்ந்து இன்று நண்பகல் அல்லது மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *