Search
Wednesday 3 June 2020
  • :
  • :

தபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்

தபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : 15 கோடி ரூபா நஷ்டம்

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தபால் திணைக்களத்திற்கு 15 கோடி ரூபாவுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக இவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன் இதனால் நாடு பூராகவும் தபால் போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. தபால் தலைமையகம் உள்ளிட்ட தபால் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
இதனால் பாரியளவிலான நஷ்டத்திற்கு தபால் திணைக்களம் தள்ளப்பட்டுள்ளது. நாளைய தினம் சகல ஊழியர்களையும் பணிகளுக்கு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள போதும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *