Search
Saturday 22 September 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களுக்காக வீடமைப்புக் கடன் திட்டம்

நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களுக்காக வீடமைப்புக் கடன் திட்டம்

மத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் முதல் முறையாக வீடொன்றைப்பெற்றுக் கொள்ளும் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளைச்சேர்ந்த மத்திய தர வருமான பயனாளிகளுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக நிவாரண கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான மத்திய வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்பு கடன்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்தக் கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக முன்னர் இருந்த வயதெல்லைக்குப் பதிலாக வங்கியினால் வீடமைப்புக் கடனை வழங்கும் போது பொதுவாக கடைப்பிடிக்கப்படும் வயதெல்லையை கவனத்தில் கொண்டும், தனியார்த்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களின் போதும், வீட்டை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பயனாளிகளின் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கேற்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பரிந்துரைத்திருந்த வகையில் இந்த வேலைத் திட்டத்தில் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்த வருமான அளவை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *