Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் இம்மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் குறித்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது.இந்த நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு தொடர்பில், இலங்கையிலுள்ள மக்கள் மாத்திரமின்றி சர்வதேசமும் அறிந்துகொள்வதற்கு ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *