Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பல பிரதேசங்களில் கடும் மழை! 3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

பல பிரதேசங்களில் கடும் மழை! 3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

வடக்கு , கிழக்கு மற்றும் மழையக பகுதிகளில் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஆயிரக் கணக்கான குடும்பங் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் மண் மேடு இடிந்து விழுந்தமையால் பதுளை மாவட்டத்தில் சில வீதிகளில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை, உடவளவ, அங்கமுவ மற்றும் தெதுறு ஓயா உள்ளிட்ட பல நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *