Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிணை முறி தொடர்பாக பதிலளிக்க எனக்கு தேவை கிடையாது : மகிந்த

பிணை முறி தொடர்பாக பதிலளிக்க எனக்கு தேவை கிடையாது : மகிந்த

பிணை முறி விவகாரம் தொடர்பான நான் யாருக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் அது தனக்கு தொடர்புபட்டது அல்லவெனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
2008 முதல் 2014 வரை இடம்பெற்ற பிணை முறி மோசடிகளுக்கு மகிந்த ராஜபக்‌ஷ பொறுப்பு கூறவேண்டுமெனவும் அவர் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் பதலளிக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிணை முறி தொடர்பான அறிக்கையில் எந்த இடத்திலும் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்தான் பதிலளிக்க வேண்டுமே தவிற நான் இல்லை என மகிந்த கூறியுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *