Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்புப் போராட்டம் – தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கோரிக்கை

வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்புப் போராட்டம் – தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கோரிக்கை

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.இந்நிலையில் வடக்கு கிழக்கில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் வெளியிட்டுள்ள காணொளியில் இன்றைய தினம் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் கிழக்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, இவர்கள் நாளைய தினம் கடைகளைத் திறந்தால் நான் வந்து கேட்பேன் நேற்றைய தினம் ஏன் திறக்கவில்லை என்று.இதற்கு எல்லாம் யார் காரணம், அரசாங்கம் இது தொடர்பில் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரியும். இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், அவர்கள் தாயகம் கேட்பதற்கு சமம்.இது தொடர்பில் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த காணொளிப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிசிர சிறிபத்தன டுவிட்டரில் பதிவிட்டமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழர்களின் உரிமையைக் கோரி இடம்பெரும் ஒரு அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த ஹர்த்தால் அமைகின்றது. அந்த எதிர்ப்பின் பிரதிபலிப்பு சிங்கள வணிகங்களுக்கு எதிரானதல்ல என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.இந்நிலையில் ஒரு பேராசிரியராக இருக்கும் இவருக்கு இவ்வாறான தொடர்ச்சியான இனவெறி பதிவுகள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *