செய்திகள்

சிறிசேனவின் புதிய அமெரிக்க நண்பர்கள்

இலங்கையின் அரசியல்நிலைமை இன்னமும் பலவீனமாகவே உள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் காரணமாக ஏற்படப்போகின்ற நீண்ட கால விளைவுகள் எவை என்பது எவரிற்கும் தெரியாத விடயமாகவுள்ளது.

ஆனால் ஓரு விடயம் மாத்திரம் தெளிவாக தெரிகின்றது – சிறிசேனவிற்கு அமெரிக்காவில் பல நண்பர்கள் உள்ளனர் என்பதே அந்த விடயம் என த டிப்ளோமட்டில் டெய்லர் டிப்போர்ட் என்ற இலங்கை குறித்த ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்

அதன் தமிழ் வடிவம்:

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டார்.அவருடன் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளிவிவகார செயலாளர் நிசா பிஸ்வாலும் இலங்கை சென்றிருந்தார்.

கெரி குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அரசாங்கம் முழு மனதுடன் வரவேற்றது.இலங்கைக்கான அமெரிக்க உயர் மட்ட விஜயங்களில் இறுதியாக இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான இந்த விடயம், இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஓபாமா நிர்வாகத்திற்கு மிகமுக்கியமானதாக அமைந்துள்ளதை புலப்படுத்தியுள்ளது.

கெரி குறிப்பிட்ட காலமே இலங்கையில் தங்கியிருந்தார்,அவரிற்கு தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்வதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லை என சிலர் கருத்து தெரிவிக்கலாம். எனினும் இந்த விஜயம் இடம்பெற்ற விதம் பல தமிழர்களையும் முஸ்லீம்களையும் ஏமாற்றமடையச்செய்திருக்கும்( அவரிற்கு கொழும்பிற்கு வெளியேயுள்ள சிங்கள ஆலயத்திற்கு செல்வதற்கு நேரமிருந்தது)
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறச்செய்வது குறித்த ஓபாமா நிர்வாகத்தின் கடந்த கால நிலைப்பாடுகள் குறித்து கெரியின் இந்த விஜயத்திற்கு பின்னர் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.

இலங்கையின் உள்நாட்டு விசாரணை பொறிமுறை சர்வதேசதராதங்களை பின்பற்றுவதாக அமையும் என கெரி நம்பிக்கை வெளியிட்டார்.
தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஆற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்திய உரையில் கெரி அதிகாரபரவலாக்கம்முதல் பிராந்திய பொருளாதார ஓத்துழைப்பு வரையிலான பல விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். காலநிலை மாற்றம் முதல் மாலைதீவில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு வரை அவரது உரையில் இடம்பெற்றிருந்தது. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வருடாந்த ஓத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

தனது உரையின் ஆரம்பத்தில் கெரி பிரச்சினைகளுக்கு நிச்சயமாக இலங்கையே தீர்வை காணப்போகின்றது, அதுவே சரியான வழிமுறை, பயனளிக்க கூடிய வழிமுறையும் அதுவே,வேறு எந்த மார்க்கமும் இல்லை என குறிப்பிட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஓத்துழைப்பு நான்கு விடயங்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்,நல்லிணக்கம்,நீதியும் பொறுப்புக்கூறுதலும்,மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் என்பனவே அந்த விடயங்கள்.

தாஜ்சமுத்திரா உரை முழுவதும் கெரி நம்பிக்கையையும் ஓத்துழைப்பிற்கான வாய்ப்புகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.வாசிங்டன் உதவிக்கு அப்பாலும் செல்வதற்கு தயாராகவுள்ளது ஆனால் அதுகுறித்த முடிவை எடுக்கவேண்டியது கொழும்பே, ஜனவரிக்கு முன்னர் இரு நாடுகளும் இடையில் காணப்பட் கசப்புணர்வு என்பது தற்போது கடந்த காலவிடயமாகிவிட்டது என்ற உத்தரவாதத்துடனேயே கெரி நிச்சமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

உள்நாட்டு விசாரணைபொறிமுறையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என கெரிக்கு சிறிசேன அரசாங்கம் உத்தரவாமளித்துள்ளது.அமெரிக்காவிடமிருந்து இந்த விடயத்தில் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு தயார் எனவும் சிறிசேன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
C5CE97B6-3484-4250-9404-B09173B4F6F6_cx0_cy2_cw0_mw1024_s_n_r1
இதில் ஏதாவது இடம்பெறுமா, எவ்வளவு வேகமாக இது இடம்பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமை அமெரிக்காவில் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் குறைவடைந்துள்ளன,இவற்றின் காரணமாக அமெரிக்க இலங்கை உறவுகளுக்கு புது வடிவம் கொடுக்கும் முயற்சிகள் தீவிரவேகத்தில் இடம்பெறுகின்றன.

சிறிசேன அரசாங்கம் சாதகமான சில ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும்,முன்னேற்றம் காணப்படாத பல விடயங்கள் உள்ளன.இலங்கையில் இன்னமும் நிiவேற்றப்படவேண்டிய பணிகள் பல உள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட கெரி ஆனால் தான் நம்பிக்கைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அவரது உரையில் மக்கள் தங்கள் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச்செய்யலாம்,அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளலாம், வாக்குப்பெட்டியின் பலத்தை பயன்படுத்தி நாட்டின் வரலாற்றையே மாற்றலாம் என்ற நம்பிக்கையை இலங்கையின் கதை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.அந்த வாக்குறுதிகளின் சக்தியை நாங்கள் ஏற்கனவே காணத்தொடங்கியுள்ளோம் என கெரி குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியல்நிலைமை இன்னமும் பலவீனமாகவே உள்ளது.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் காரணமாக ஏற்படப்போகின்ற நீண்ட கால விளைவுகள் எவை என்பது எவரிற்கும் தெரியாத விடயமாகவுள்ளது. ஆனால் ஓரு விடயம் மாத்திரம் தெளிவாக தெரிகின்றது – சிறிசேனவிற்கு அமெரிக்காவில் பல நண்பர்கள் உள்ளனர் என்பதே அந்த விடயம்.

சமகளம் செய்தியாளர்