செய்திகள்

சிறிசேனவின் விஜயத்துக்கு எதிராக லண்டனில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்துக்கு எதிராக இன்று லண்டலில் தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் நடைபெற்றது.

இதன் பின்னர், பொதுநலவாய அமைப்பின் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் மாலை 5 மணிமுதல் மாலை 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் ஒழுங்கு செய்திருந்தன.

மஹிந்த அரசாங்கத்தில் யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ஒரு போர்க்குற்றவாளி என்றும் பழைய அரசுக்கும் புதிய அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஐ. நா விசாரணை அறிக்கை பின்போடப்பட்டமையையும், இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கும் வகையிலும், ஜனாதிபதி மைத்திரியை ‘போர்க்குற்றவாளி’ என்றும் விபரிக்கும் வகையிலான ஏராலமான சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

 1 2 3 Protest4

2134