செய்திகள்

சிறுபான்மை சமூகங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்திற்கான கடினமான சவால்

இலங்கை தான் அறிந்திராத தேவதைக்கு வாக்களித்துள்ளது, அவர் இலங்கையின் தலைவிதியை தீர்மானிப்பவராக மாறலாம் என கருத்து வெளியிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானபிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் இலங்கையின் வெளிவிவகார கொள்கைகள் மாறும், இந்தியா மீண்டும் பழைய இடத்தைபெறும்,அதேவேளை சிறிசேன சீனாவுடனான உறவுகளை தொடர்வார் என்றும் தெரிpவித்துள்ளார்.
த இந்துவிற்கு எழுதியுள்ள கட்டுரையிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்த குற்றங்களுக்கு பொறுப்பு கூறும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் ; அதேவளை இந்த விவகாரத்தில் புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு
சிறிசேனவாலும், விக்கிரமசிங்கவாலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? பாதை கரடுமுரடானதாக தான் காணப்படுகின்றது,தற்போதைய பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதே தற்போதுள்ள முக்கிய சவால்,ஜனநாயக சீர்திருத்தங்களை 100 நாட்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.தற்போதைய பாராளுமன்றத்துடன் பணியாற்ற முடியாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கப்படலாம்.
இலங்கையில் ஜனநாயகத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கும்,அனைவரையும் உள்வாங்கும் பாதையில் நாட்டை இட்டுச்செல்வதற்கும் எப்போதாவது கிடைக்க கூடிய அரியசந்தர்ப்பமிது.
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்திற்கான கடினமான சவாலாக அமையப்போகின்றது. எனினும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய நடைமுறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பிக்கலாம்,
பல விடயங்களை அவர் சரியான முறையில் முன்னெடுக்கலாம்,தமிழ் மக்களின் மொழி உரிமைகளை நிலைநாட்டலாம்,வடபகுதியில் இராணுவம் நிலைகொண்டுள்ள சில பகுதிகளிலிருந்து இராணுவத்தை அகற்றலாம். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்.
லசந்த விக்கிரமதுங்க, ஜோசப்பரராஜசிங்கம் போன்றவர்களின் படுகொலைகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கலாம்.
யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என சர்வதேசமூகம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும், கொடுக்கவேண்டும்.
அதேவேளை இந்த விடயத்தில் சர்வதேசக்திகள் புதிய அரசாங்கத்திற்கு சிறிது காலஅவகாசத்தை வழங்கவேண்டும்,சிங்கள மக்களின் கருத்துக்களை கருத்திலெடுக்காமல் புதிய அரசாங்கம் செயற்படு;ம் என கருத முடியாது.
சிரியா மற்றும் சேர்பியா அனுபவங்களை கருத்தில்கொள்ளும்போது பொறுப்புக்கூறுதலுக்கு துரதிஸ்டவசமாக சிறிது காலம் எடுக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் அது இறுதியில் அது நடைபெறும்.