செய்திகள்

சிறுபோக நெற்செய்கைக்கான மானிய உரம் விரைவில் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ்

சிறுபோக நெற்செய்கைக்கான மானிய உரம் இதுவரையில் தமக்கு வழங்கப்படவில்லையென யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், எனவே, இது விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, உரிய மானிய உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த மானிய உரம் கமநல அபிவிருத்தித் திணைக்களங்களிடம் உள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், கமக்காரர்களால் அதனைப் பெற்றுக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுவதாகவும், இந் நிலையில் சிறுபோக நெற்செய்கைகளும் உரிய செய்கையாளர்களும் பாதிப்படையக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி மானிய உரத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.