செய்திகள்

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது

காத்தான்குடி – ஒல்லிக்குளம் பிரதேசத்தில் பத்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் 55 வயதுடைய சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஒல்லிக்குளம் பிரதேசத்தில் குறித்த சந்தேகநபரின் வீட்டிற்கு முன்னாள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துள்ளார். பின் வீட்டின் கதவுகளை மூடி விட்டு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.

சிறுமி கூக்குரலிட்டு அழுது கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று தாயிடத்தில் விடயத்தை கூறியதையடுத்து, அயலவர்கள் காத்தான்குடி பொலிசுக்கு அறிவித்துள்ளனர். பொலிசார் விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.