செய்திகள்

சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் 11 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பகுதியில் 11 வயதுடைய சிறுமியொருவரை நேற்று முன்தினம் (06-04-2016) பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியது தொடர்பாக ஒருவரை கைது செய்த முழங்காவில் பொலிசார் குறித்த சந்தேக நபரை நேற்று (07-04-2017) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான்; ரீ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 20ம்திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
n10